கார், வாட்ச் எதும் கிடைக்கலையா அனிருத்? இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத பத்திரிக்கையாளர்..

Kamal Haasan Suriya Anirudh Ravichander Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 16, 2022 12:10 PM GMT
Report

3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உருவாகியவர் அனிருத் ரவிச்சந்திரன். இப்படத்தில் இடம்பெற்று வை திஸ் கொலவரி பாடல் உலகமெங்கிலும் பரவி மிகப்பெரிய சாதனையை யூடியூப்பில் நிகழ்த்தியது.

இப்படத்திற்கு அனிருத், விஜய், அஜித், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, நயன் தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் பணியாற்றி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

படம் மிகப்பெரிய வெற்றியை பெற அனிருத்தின் பின்னணி இசையும் ஒரு காரணமாக இருந்துள்ளது. படத்தின் சக்சர்ஸ் மீட்டிற்காக அனிருத் லோகேஷ் கனகராஜுடன் கேரள பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர், லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் கொடுத்த கமல் சார் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேட்டுள்ளார். இதற்கு சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் உடனே, எனக்கு விக்ரம் படத்தை கொடுத்தார் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் அனிருத்.