பூமர், கிரிஞ்ச்!! நடிகர் சரத்குமாரை வெச்சு செய்யும் இணையவாசிகள்.. ஏன் தெரியுமா
நேசிப்பாயா
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கும் படம் 'நேசிப்பாயா'. இந்த படம் வரும் 14ஆம் தேதி தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அதர்வா, சரத்குமார் என சில சினிமா நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர்.
ஏன் தெரியுமா?
இந்நிலையில், சரத்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள், Wait சார் எனக் கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு, சரத்குமார் Wait-ஆ 83 கிலோ என சிரித்து கொண்டே நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சரத்குமாரின் இந்த செயலை கண்டு இணையவாசிகள், பூமர், கிரிஞ்ச் என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.