நடுராத்தியில் நடிகையுடன் காரில் போன ரஜினிகாந்த்!! அனிருத் தந்தை செய்த செயல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார். அவர் பற்றி நடிகர்கள் நடிகைகள் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருவார்கள்.
அப்படி நடிகை ராதிகா அளித்த பேட்டியில், ரஜினியின் இருவேறு முகங்களை நான் பார்த்துள்ளேன், நான் அவரை ரஜினி என்றுதான் கூறுவேன். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும். ஆனால் நான் ரஜினி என்றுதான் கூறுவேன்.
நான் நடிகை ஸ்ரீதேவி, ரஜினி என்று மூவரும் இரவு நேரங்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஏவிஎம் ஸ்டூடியோவிலிருந்து வீட்டிற்கு காரில் வேகமாக ரிட்டன் ஆவோம்.
ஒருமுறை நானும் ரஜினியும், அவரது பைக்கில் இரவு நேரத்தில் சென்னையை சுற்றிக்கொண்டு இருந்தபோது ரஜினி இங்கு நான் படுத்து தூங்கியிருக்கிறேன், இங்கு தங்கி இருக்கிறேன், இங்கு சாப்பிட்டு இருக்கிறேன், எனக்கு இந்த இடத்தில் இப்படியான சம்பவம் நடந்தது என்று கூறி வந்தார்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பலரது கஷ்டங்கள் குறித்து தெரியும், ஆனாலும் ரஜினி மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இப்படி நாங்கள் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கார் எங்களை நோக்கி வேகமாக வர, சடன் பிரெக் அடித்து நின்றது.
இதைப்பார்த்ததும் எனக்கு பதறிவிட்டது. யார் என்று பார்த்தால் ரஜினியின் மனைவி லதாவின் சகோதர்(அனிருத்தின் தந்தை). அவருக்கு என்னவென்றால் ரஜினி நடுராத்திரியில் ஒரு பொண்ணுடன் பைக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் காரை வேகமாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஆனால் நானும் ரஜினியும் வந்தது லதாவுக்கு தெரியும் என்று தெரிவித்தார் என்று ராதிகா பகிர்ந்துள்ளார்.