2 லட்சம் வாடகை பாக்கி! ஸ்டுடியோவ இப்படியா வெச்சிருப்பீங்க அனி..

vijay nelson anirudh sivakarthikeyan beast beastfirstsingle
By Edward Feb 08, 2022 04:20 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் 3. இசையமைப்பாளராக அனிரூத் முதன் முதலில் இசையமைத்த படமாக உருவாகியது. அதிலும் வை தீஸ் கொலவரி பாடல் உலகம் முழுவதும் சென்று பிரபலமாகி சாதனை படைத்தது.

இதையடுத்து, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து இசையமைத்து ஹிட் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது ஸ்டுடியோவிற்கு வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் வைரலானது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் பாடல் வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் நெல்சன் அனிரூதுடன் சேர்ந்து ஒரு பிரமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலின் அறிவிப்பிற்கே ஒரு 6 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அனிரூத்தின் ஸ்டுடியோ வெளியில் கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

அப்படியென்றால் அந்த கட்டடம் முழுவதையும் அனிரூத் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இப்போதான் முதல் பாட்டே ரெடியாகுதா என்று விஜய் அனிரூத்தை கலாய்க்கும் விதம் வேறலெவல் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.