சிம்புவை அசிங்கப்படுத்திய அனிதா! கமல் ஹாசன் விலகியதால் ஏற்பட்ட மாற்றமா?
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் நிறைவடைந்ததை அடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொலைக்காட்சியோடு இணைந்து பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் வனிதா, தாடி பாலாஜி, சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டவர்கள் வெளியேறிவிட்டனர். அவர்களை தொடர்ந்து, வைல்ட் கார்ட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், கேபிஒய் சதீஷ் உள்ளிட்டவர்கள் உள்ளே வந்துள்ளனர்.
பிக்பாஸ் 4ல் பங்கு பெற்ற அனிதா பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பை கொடுத்து வருகிறது. கமல் ஹாசன் நிகழ்ச்சியை விட்டு படத்தின் சில வேலைகள் காரணமாக வெளியேறியதில் இருந்து அனிதாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டது.
நிரூப்புடன் சேர்ந்து கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவது, வாயில் இருந்து தண்ணீரை துப்புவதுமாக சில காரியங்களை செய்து மற்ற போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறார். கடந்த வாரம் சிம்பு போட்டியாளர்களுக்கு சில கருத்துக்களை கூறிய நிலையில், அனிதா சிம்பு குறித்து சர்ச்சை கருத்தினை கூறியுள்ளார்.
ஸ்ருதியிடம் பேசும் அனிதா, நீ பேசுனது மிகவும் ஆழமான விஷயம். சிம்பு புதுசு என்பதால் அவருக்கு இது சிம்புவுக்கு பிரியாது. அதை பற்றி யோசிக்கவும் மாட்டார். 5 சீசனையும் தொகுத்து வழங்கியதால் அது கமல் சாருக்கு இது புரிந்திருக்கும் என தெரிவித்திருந்தார். இப்படி அனிதா பேசியது சிம்பு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனிதாவை கேலி செய்து கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
Ivanga romba depth ana point sonnangalam athu STR ku puriyatham! ???♀️#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/YuIZPt6Sp2
— Stone Heart (@Stonecoldhrt) March 13, 2022