என் கணவருடன் விவாகரத்தா? பிக்பாஸ் அனிதா சம்பத் அதிர்ச்சி பதிலடி..
தமிழ் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்ரி ஒருசில படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்து பிரபலமானவர் அனிதா சம்பத். காப்பான், தர்பார் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்தார். செய்தி வாசிப்பாளர்களென்றே ரசிகர்கள் இருப்பதை போன்று இவரும் அந்த வரிசையில் இருந்தார்.
பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். தாலி கழட்டுவது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசுவது என்று கலக்கினார். இடையில் ஆரி அனிதாவின் கணவர் பற்றி பேசியதால் உதட்டை கடித்து கோபப்பட்டு பேசினார். இதன்பின்னும் கணவர் பற்றி பேட்டிகளிலும் இணையதள பக்கங்களிலும் பேசி பதிவிட்டு வருகிறார்.
இப்படியொரு நிலையில் தன் கணவருடன் விவாகரத்து என்று செய்திகள் பரவியதை கண்டு ஷாக்காகியுள்ளார். உங்களுக்கு கண்டண்ட் இல்லை என்பதற்காக இந்த அளவிற்கு இறங்கிடீங்களே என்றும் யுடியூபில் வீடியோ போடுறத அட்மின் பாக்கவில்லையா என்று கிண்டலடித்து புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
