டிஜிட்டல் விபச்சாரம்..தாய்லாந்தில் டிமாண்ட் இருக்குன்னு!! சப்ஸ்கிரிப்ஷனுக்கு எதிராக அனிதா பதிலடி..

Zee Tamil Gossip Today Anitha Sampath Tamil TV Shows
By Jai Nov 26, 2026 07:47 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வாரம் சப்ஸ்கிரிப்ஷன் பற்றி பேசிய சில பெண்கள் குறித்து பலரும் விமர்சித்து காட்டமான கருத்துக்களை முன் வைத்து வந்த நிலையில், தொகுப்பாளினி அனிதா சம்பத், தன்னுடைய கடுமையான விமர்சனத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழா தமிழா

ஜீ தமிழில் தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறதா? இல்லையா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

டிஜிட்டல் விபச்சாரம்..தாய்லாந்தில் டிமாண்ட் இருக்குன்னு!! சப்ஸ்கிரிப்ஷனுக்கு எதிராக அனிதா பதிலடி.. | Anitha Sampath Retort To A Tamizha Tamizha Woman

அதில் சோசியல் மீடியாவில் சப்ஸ்கிரைப் மூலம் வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் தவறான பாதையில் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செய்தி வாசிப்பாளரும் பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் கடுமையான தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அனிதா

அதில், டிஜிட்டல் விபச்சாரத்தை இதுபோன்ற பெண்கள் நியாயப்படுத்துவதை பார்க்க பாவமாக இருக்கிறது. ஆடை சுதந்திரமும் சப்ஸ்கிரிப்ஷனும் எப்போது ஒன்னாச்சு?

இது பிசினஸ்னா எதற்கு பொம்பள பிள்ளைங்க படிக்கணும்? மாதம் 7 ஆயிரம் சம்பளத்திற்கு உழைத்து வீட்டை காப்பத்தணும்? எதுக்கு 3000 சம்பளத்திற்கு வீட்டு வேலை செய்யணும்? தாய்லாந்தில் விபச்சாரம் டிமாண்டில் இருக்கு, அதுக்குன்னு யாராவது குடும்பத்தோட போய் வேலை செய்வாங்களா? என்று கடுமையான கேள்வியை கேட்டுள்ளார்.

Gallery