17 வயதில் கல்யாணம்!! ஒரே ஆண்டில் விவாகரத்து செய்த நடிகை அஞ்சு பிரபாகர் ஓப்பன் டாக்ஸ்..
90ஸ் காலக்கட்டத்தில் சிறுசிறு ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அஞ்சு. பல காமெடி நடிகர்களுடன் பயணித்த அஞ்சு, வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். கல்யாண வாழ்க்கையைபொறுத்தவரை பார்ட்டனரை தேர்வு செய்யும் போது அவரை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொண்டு பின் கஷ்டப்படக்கூடாது.

சிலர் அதில் வாழ வரும் கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு சமாளிப்பார்கள். ஆனால் சிலர் அப்படி இருப்பதில்லை, தவறான முடிவெடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வை அந்த வாழ்க்கை கொடுத்துவிடும். டைகர் பிரபாகர் மீது எனக்கு காதல் எல்லாம் இல்லை. நடிப்பு கேரியரை முடிவுத்துகொள்ள வேண்டும் என்று நினைத்த போது ஒரு கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது சிறப்பு தோற்றத்தில் அந்த படத்தில் நடித்த டைகர் பிரபாகர் என்னிடம் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். நல்ல ரோல் வந்தால் நடிப்பேன் என்று கூறினேன். பின் கன்னட படம் ஒன்று எடுக்க இருக்கிறேன் மொத்தம் மூன்று கதாநாயகிகள், நீங்கள் இரு நாயகியாக நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, மலையாள படத்தில் புக் ஆகியிருந்தேன் என்று கூறினேன்.

முடிவை நீங்களே எடுங்கள் என்று கூறியதும் கன்னடத்தில் நடித்தால் அனுபவம் கிடைக்கும் என்பதற்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படத்தில் அவருடன் பழக்கம் ஏற்பட்டு என்னை அக்கறையோடு பார்த்துக்கொண்டதாக கூறியிருக்கிறார் அஞ்சு. அவர் என்மீது அக்கறை காட்டியதால் அவரை திருமணம் செய்யலாம் என்ற முடிவை எடுக்க வைத்தது.
பின் கிட்டத்தட்ட அவரை திருமணம் செய்யும் போது என் அப்பா வயது அவருக்கு. எனக்கு 17 வயது இருக்கும் போது கல்யாணம் பண்ணேன். ஆனால் நான் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை. உண்மையில் சொல்லப்போனால் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமல் லிவ்விங் டு கெதரில் தான் இருந்தோம். அதன்பின் பின் தான் எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்ததாக அஞ்சு கூறியிருக்கிறார்.