ஒரு பாடி மசாஜுக்கு இத்தனை லட்சம் செலவா!! வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை அஞ்சு குரியன்..

Indonesia Tamil Actress Anju Kurian
By Jai Apr 26, 2026 05:30 AM GMT
Report

ஏப்ரல், மே மாத வெயிலை முன்னிட்டு பல பிரபலங்கள் குளுகுளு பிரதேசங்களுக்கு கிளம்பி சென்றுவிடுகிறார்கள். அந்தவகையில் சினிமா பிரபலங்கள் மாலத்தீவு, பாலி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அப்படி பிரபல நடிகை அஞ்சு குரியன் பாலித்தீவுக்கு சென்றுள்ளார்.

ஒரு பாடி மசாஜுக்கு இத்தனை லட்சம் செலவா!! வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை அஞ்சு குரியன்.. | Anju Kurian 7 25 Lakhs For Japanese Spa Massage

அஞ்சு குரியன்

நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அஞ்சு குரியன், பாலி தீவில் ஸ்பா மசாஜ் பற்றிய ஒரு வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஒரு பாடி மசாஜுக்கு இத்தனை லட்சம் செலவா!! வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை அஞ்சு குரியன்.. | Anju Kurian 7 25 Lakhs For Japanese Spa Massage

பொதுவாக ஃபுல் பாடி மசாஜ் பேக்கேகள் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சென்னையில் பெரிய ஸ்பா செண்டர்களில் கிடைக்கிறது. வெளிநாட்டிலுள்ள தீவுகளில் மசாஜ்கள் சற்றே விலை அதிகம் தான்.

ரூ.7.25 லட்சம்

ஆனால் அஞ்சு குரியன் எடுத்துக்கொண்ட ஜப்பான் ஸ்பா மசாஜ் அதிகபட்சமாக ரூ.7.25 லட்சம் ஆனதாக பில்லுடன் அந்த வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். வெறும் டவலுடன் அவர் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தும், மசாஜ் விலையும் பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளி குவித்து வருகிறார்கள்.