யுவன் கருப்புனா நான் அண்டங்காக்கா! அண்ணாமலையை ஓட்டும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. தன் இசையால் தமிழ் ரசிகர்களை ஈர்த்து வரும் யுவன் சமீபத்தில் பீச்சில் கருப்பு ஆடையணிந்து டார்க் திராவிடன் என்ற புகைப்படத்தோடு ஒரு பதிவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சில தினக்களுக்கு முன்பு இளையராஜா மோடி சிறந்த ஆட்சியாளர் என்று கூறியதோடு அம்பேத்கருக்கு இணையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியிருக்கும் சூழலில் யுவன் கருப்பு திராவிடன் என்று பதிவிட்டதும் இணையத்தில் பேசு பொருளாக மாறிவருகிறது.
இதை அறிந்த பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணமலை பேட்டியொன்றில் காமெடியாக பேசியதை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். கருப்பு வேட்டி கட்டிட்டு கருப்பு திராவிடன் என்று கூறிவிட்டார்.
யுவன் சங்க ராஜாவை விட நான் கருப்பு. அவரவிட நான் அண்டங்காக்கா கருப்பு என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போ ஆடுனு கூப்படனுமா இல்ல அண்டங்காக்கனு கூப்படனுமா ? pic.twitter.com/3ZiLlprgZ3
— பாக்டீரியா (@Bacteria_Offl) April 18, 2022