அண்ணாத்த நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா, தயாரிப்பாளார் தலையில் துண்டா?

annaatthe rajinikanth
By Tony Nov 22, 2021 08:00 AM GMT
Report

 அண்ணாத்த தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படம்.இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் அண்ணாத்த முதல் 4 நாட்கள் இமாலய வசூல் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் மழை காரணமாக படத்தின் வசூல் குறைய ஆரம்பித்தது.

அதே நேரத்தில் வார இறுதியில் இப்படத்திற்கு நல்ல கூட்டம் தான் வந்தது, ஆனால், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அவருடைய யு-டியுப் சேனலில் அண்ணாத்த வசூல் விவரங்களை வெளியிட்டார்.

இதில் அண்ணாத்த படம் தயாரிப்பாளருக்கு ரூ 15 கோடிகளுக்கு மேல் நஷ்டம் என தெரிவித்து இருந்தார்.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகினர், அதோடு அண்ணாத்த சன் பிக்சர்ஸ் நேரடி ரிலிஸ் என்பதால் எப்படியும் பெரிய ஷேர் கிடைத்திருக்கும்.

அப்படியிருக்க இவ்வளவு பெரிய நஷ்டம் வாய்ப்பே இல்லை என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ அண்ணாத்த குறித்து சன் பிக்சர்ஸ் வாய் திறந்தாலே விடிவுக்காலம்.