போட்டி கடுமையா இருக்கே! லெஜண்ட் சரவணாவுக்கே டஃப் கொடுக்கும் சிங்கம் அண்ணாமலை..

K. Annamalai
By Edward Jun 07, 2022 02:00 PM GMT
Report

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி தற்போது பிஜேபி கட்சியின் மாநில தலைவராக இருந்து வருபவர் ஐபிஎஸ் அண்ணாமலை. அரசியலில் ஏற்பட்டும் பல விசயங்களை பேசி சர்ச்சையிலும் சிக்கி வரும் அண்ணாமலை நடிப்பில் கன்னட படம் வெளியாகவுள்ளது.

இரண்டு கைகளையும் இழந்த ஒருவர் சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வீரர் விஸ்வாஷின் வாழ்க்கை வரலாற்று படமான உருவாகியுள்ள ’அரபி’ல் நீச்சல் போட்டியின் கோச்சாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதில் சிங்கம் அண்ணாமலை என்ற பெயர் டைட்டிலோடு புல்லட்டில் வரும் வீடியோவை இணையத்தில் பலர் கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்படத்திற்காக அண்ணாமலை 1 ரூபாய் தான் சம்பளமாக பெற்றுள்ளாராம்.