காயப்படுத்தியவரை உதறி தள்ளிய பிக்பாஸ் 8 அன்ஷிதா.. யாரா இருக்கும்?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது. 24 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8ல் முத்துக்குமரன், செளந்தர்யா, விஷால், பவித்ரா மற்றும் ரயான் டாப் 5 இடத்தினை பிடித்தனர்.
பிக்பாஸ் சீசன் 8
இறுதியில் பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசினை தட்டிச்சென்றார். பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்து தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்ஷிதாவிடம், எவிக்ட்டான பின் செய்த முதல் வேலை என்ன என்று விஜய் சேதுபதி கேட்டுள்ளார். அதற்கு அன்ஷிதா, இந்த சீசனின் 3வது வாரத்தில் இருந்து என் வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பித்து நிறைய யோசித்தேன். அதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அன்ஷிதா
இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒருத்தர் என்னை காயப்படுத்தி தான் அனுப்பிவிட்டார். அந்த நபர் இனி என் வாழ்க்கைக்கு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த வீடு என்னை சிந்திக்க வைத்தது.
நான் வெளியே வந்ததும் அந்த நபரைத்தான் முதலில் பார்த்தேன், இனிமேல் நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக சொல்லிவிட்டு வந்தேன், இதைத்தான் முதலில் செய்ததாகவும் விஜய் டிவியில் மற்றொரு பிராஜெக்ட்டில் இணைந்திருக்கிறேன்.
ஷூட் நடந்து கொண்டிருப்பதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி அன்ஷிதாவை திருப்பிக் கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி யாரை தான் வேண்டாம் என்று கூறினார் அன்ஷிதா என்று பலரும் யூகித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.