இருட்டில் ரம்பாவுக்கு ரஜினி செய்த விவகாரம்!! அதெல்லாம் ரொம்ப கம்மின்னு கூறும் பிரபலம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல சுவாரஸ்யமான விசயங்களை பகிந்து கொண்டார். அதில், அருணாச்சலம் படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பில் இருட்டாக இருந்தது. அப்போது யாரோ முதுகில் என்னை தட்ட அங்கையே கத்தி விட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது ரஜினி சார் என்று, பிறகு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறினார்.
ஆனால், சிலர் இதை எதோ ரஜினி ரம்பாவிற்கு தொல்லை கொடுத்தார் என்பது போல் தவறாக சித்தரித்து பரப்பி வந்துள்ளனர். இதனை பல பத்திரிக்கையாளர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வந்த நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் இதுகுறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார். ரஜினிகாந்தை ரம்பா எங்கேயும் டேமேஜ் செய்யவில்லை.
படப்பிடிப்பில் நடிகர்கள் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் விளையாட்டாக நடந்து கொண்டதை தான் அவர் சொன்னார். அவர்கள் சொன்னதை விட ஆயிரம் மடங்கு மோசமான விசயங்கள் இங்கெல்லாம் நடந்து இருக்கிறது. எல்லாருக்கும் நடந்து இருக்கும், எல்லாராலும் நடந்து இருக்கு. அதையெல்லாம் பேசினால் மொத்த தமிழ்நாடே நாரியிருக்கும். ஆனால் அதை யாரும் பேசவில்லை.
இப்போது ரஜினிகாந்துக்கு 71 வயது. இப்போது அது நடந்திருந்தால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அன்று அப்படி நடந்தது, ரம்பா வளர்ந்து வந்த காலம், இதே ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு அறிமுக நடிகையை ரஜினியிடம் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன்பின் அடுத்த மாடியில் வேறொரு நடிகையை காட்டி அறிமுகப்படுத்துவார்கள்.
அப்போது இப்படி தான் நடக்கும். அதன்பின் நடிக்க அரம்பித்த ரம்பா, நடிகை திவ்யபாரதி இறந்து ஒரு படம் பாதியில் நின்று போனது. அவரை போல் இருக்கும் நடிகையை பார்க்கும் போது தான் ரம்பாவை வைத்து நடிக்க வைத்தார்கள்.
அப்படி ஆரம்பத்தில் ரஜினி ரம்பாவை பார்க்கும் போது எப்படி இருக்கும். அதுவே ரம்பாவிற்கு ஒரு கனவு. அந்தகாலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் அதை, இப்போது எடுத்து பேசுவது தவறு. இதற்கு காரணம் ஐடி குழு தான் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.