இயக்குநருக்கு இப்படியொரு டார்ச்சர் செய்தாரா நயன்தாரா!! உண்மையை உடைத்த பிரபலம்..
நயன்தாரா
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா பற்றிய விவகாரம் தான் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நாளில் இருந்தே நயன் தாரா பற்றி விவாதம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் தனுஷுடன் ஏற்பட்ட பிரச்சனை முதல் பல விஷங்களை பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதனையடுத்து நயன் தாரா ஒரு பேட்டியொன்றில் சினிமா விமர்சகர்களை 3 குரங்குகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு அந்த யூடியூப் விமர்சகர்களும் டீசண்ட்டாக நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்திருந்தனர்.
அந்தணன்
இந்நிலையில் பத்திரிக்கையாளரான அந்தணன், உதவி இயக்குநர் ஒருவர் நயன் தாரா பற்றி தன்னிடம் கூறியது பற்றி பகிர்ந்துள்ளார். உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம், நயன் தாரா பற்றி பேசினீர்கள், ஆனால் அந்த தகவலை எப்படி வீட்டீர்கள் எனு தெரியவில்லை என்று ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
இறைவன்
இறைவன் படத்தில் நடிப்பதற்காக 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளமும் அவரது உதவியாளருக்கு ஒரு நாளுக்கு 1 லட்சம் சம்பளமும் பேசப்பட்டது.
அப்படி இருக்கும் போது இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் வந்த நயன் தாரா, இயக்குநரை அழைத்து இனி என்னால் காலையில் ஷூட்டிங் வரமுடியாது என்றும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வைத்துக்கொள்ளும் படி கூறியிருக்கிறார்.
ஆனால் படத்தில் பெரும்பாலான காட்சிகள் பகலில் தான் நடக்கும் என்று இயக்குநர் கூற, உதவி இயக்குநர் ஒருவர் நயனிடம் கூறியிருக்கிறார்.
இயக்குநருக்கு டார்ச்சர்
அதற்கு அவரோ எனது சினிமா அனுபவம் என்ன, உனது சினிமா அனுபவம் என்ன என்று அவ்வளவு சண்டை போட்டிருக்கிறார் நயன் தாரா. வேறு வழியின்றி இயக்குநரும் படத்தை முடித்துவிட்டார். ஷூட்டிங்கின் கடைசி நாளில் படக்குழுவினருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று நயன் ஆசைப்பட்டுள்ளார்.
இயக்குநரோ நான் வரவில்லை அவர்களை போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பசொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் நயன் தாரா இல்லை அவர் வரும்வரை காத்த்திருக்கிறேன் என்று கூறி வெயிட் செய்து இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் போட்டோ எடுத்துச் சென்றதாக அந்த உதவி இயக்குநர் தன்னிடம் தெரிவித்ததாக அந்தணன் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.