பிரேம்ஜி குடும்பத்தில் இப்படியொரு பிரச்சனையா.. மனைவி போட்டுடைத்த ரகசியம்
பிரேம்ஜி
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து "என்ன கொடுமை சார் இது" என்ற வசனம் மூலம் பிரபலமானவர்.

கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பேச்சுலராக இருந்து வந்த பிரேம்ஜி ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இந்து தெரிவித்துள்ள விஷயம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போட்டுடைத்த ரகசியம்
அதில், " என் அம்மா, அப்பா, என அனைவரும் என் திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆனால் என் தம்பி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை, என் தம்பிக்கு பிரேம்ஜியை பிடிக்கவில்லை.

அவரும் என் தம்பியிடம் பேசிப்பார்த்தார் ஆனால், அவனுக்கு புரியவில்லை. இப்போது தான் படித்து முடித்தான், இன்னும் மெச்சூரிட்டி வரவில்லை, அவனே ரியலைஸ் பண்ணி வருவான்னு விட்டாச்சு” என்று கூறியுள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        