மாயா ஜெயித்திருந்தால் இதுதான் கமலுக்கு நடந்திருக்கும்!! உண்மையை உடைத்த பிரபலம்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிறைவு பெற்றுள்ளது. நேற்று இறுதி நிகழ்ச்சி கமல் ஹாசனால் நடத்தப்பட்டு விஜே அர்ச்சனாவை டைட்டில் வின்னர் என்று அறிவித்து கோப்பையும் 50 லட்சம் தொகையையும் கொடுத்திருந்தார். இதற்கிடையில் மாயா ஜெயித்துவிட கூடாது என்று பலர் கருத்துக்களை கூறி வந்துள்ளனர்.
நல்ல வேலையாக மாயா ஜெயிக்கவில்லை என்றும் மாயா அப்படி ஜெயித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சினிமா விமர்சகர் அந்தணன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இங்கு இருக்கிற காக்காய் கூட்டமும் நரி கூட்டமும் மாயா ஜெயித்திருந்தால் கமல் ஹாசனின் இமேஜை கொத்தி திண்ணு இருக்கும்.
கடந்த சில வாரங்களாகவே கமல் ஹாசன் மாயாவுக்கு சப்போர்ட் பண்றாரு, கமலுக்கு மாயாவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கு என்று பல யூடியூப் சேனல்கள் பேசி வருவது வருத்தமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய லிஜெண்ட்டை எங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பேசுகிற சில விசயங்கள். அதை பெரிதாக பூதாகரமாக இரண்டு பேருக்கும் நடுவில் முடிச்சு போட்டது எனக்கு அதிர்ச்சியாகியது.
சமீபத்தில் புகழ், குரேஷி, கமல் - மாயாவை வைத்து ஒரு நிகழ்ச்சியில் டிரோல் செய்திருந்தனர். அதை யாரும் கேட்காமல் இருந்தனர். அதேபோல் நடிகர் விவேக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்திருந்தார். அப்போது பாக்கியராஜை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவர் வேட்டியை சரியாக மடித்து கட்டாமல் விட்டுவிட்டார் என்று சொன்னதும் முகம் மாறியிருக்கிறது.
இதை பலர் விவேக்கிற்கு கால் செய்து கண்டித்திருக்கிறார்கள். இதற்காக விவேக் பகீரங்கமாக பாக்கியராஜிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் தான் புகழும் குரேஷிம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் இருந்து கேட்டதால் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் சினிமா சம்மந்தப்பட்டவர்கள் யாரும் அவர்களை கேட்கவில்லை.
கமல் ஹாசன் கூட பல மேடைகளை நாகரீகம் காத்திருக்கிறார். அரசியலில் கூட சிலரை பேசியிருக்கிறாரே தவிற, சினிமாவில் யாரையும் தரைகுறைவாக பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரை போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை, அவது புகழை நீங்கள் கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போது என்று அந்தணன் கூறியிருக்கிறார்.