வாழ்க்கையில் மறக்க முடியாத வலி அது, அலட்சியப்படுத்தினேன்.. அனுபமா உருக்கம்!
அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அனுபமா உருக்கம்!
இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளிப்படையாக பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " என் நெருங்கிய தோழி ஒருவர். நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. நான் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.
அவர் என்னுடன் பேச முயற்சி செய்தார். ஆனால், அவரை அலட்சியப்படுத்தினேன். இரண்டு தினங்களுக்கு முன் தான் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அந்த செய்தி என் வாழ்க்கையில் மறக்க முடியாத வலியை கொடுத்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.