கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை கத்ரீனா? உற்சாகத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ்!
கத்ரீனா கைஃப்
பாலிவுட் திரையுலகில் டாப் நாயகிகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பூம் படத்தின் மூலம் நடிகையாக ஹிந்தியில் அறிமுகமானார்.
தொடர்ந்து ரேஸ், சிங் இஸ் கிங், Ek Tha Tiger, தூம் 3, Thugs of Hindostan, டைகர் 3 என பல படங்களில் நடித்து வந்தார். 23 ஆண்டுகளை சினிமாவில் கடந்திருக்கும் கத்ரீனா கைஃப் இன்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விக்கி கவுஷால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2021ம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கர்ப்பமா?
கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன.
அதற்கு முக்கிய காரணம் மெரூன் சிவப்பு நிற கவுனில் கத்ரீனா நடத்திய போட்டோஷூட்டில், அவரது வயிற்றுப் பகுதி கர்ப்பிணிப் பெண்களுக்கு இருப்பது போல சற்று முன்னோக்கி வந்திருந்தது.
இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. ஆனால், இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.