11 குழந்தைகள் பெத்துக்க ஆசைப்பட்டேன்..பீரியட்ஸை!! நடிகை அனுபமா உருக்கமான பேச்சு..
அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், கேரள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்தார். தன்னை அந்த நபர் முழுமையாக கட்டுப்படுத்த பார்த்தார், 2 ஆண்டுகள் மனதாலும் உடலாலும் வேதனை அடைந்தேன் என்று விரிவாக கூறியிருந்தார். அந்த நடிகர் துருவ் விக்ரம் தான் என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வந்த நிலையில், அனுபமா பேசிய 2வது பார்ட் பேட்டி வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
]
அதில், ஆரம்பத்தில் எல்லாம் எனக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். அதனால் 11 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அந்த உறவிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம், கஷ்டம் எல்லாம் பார்த்து இப்போது கல்யாணம் பண்ணவே பயமாக இருக்கு, பிடிக்கவே இல்லை. நான் 'பர்தா' படத்தின் பிரமோஷனுக்காக போகும்போது, அந்த நபர் என்னை போக வேண்டாம் என்று சொன்னார். பீரியட்ஸ் பற்றி மோசமாகவும் பேசினார்.
ஆனால், அவரையும் மீறி நான் பட பிரமோஷனுக்கு சென்றேன். அதனால் அதிகமான சண்டை போட்டார். அப்பக்கூட செய்தியாளர்கள் கேட்கும்போது என்னால் பேச முடியாமல் நான் அழுதுவிட்டேன். நான் எப்போதும் சந்தோஷமாக ரொம்பவும் சிரித்தபடி இருப்பேன், ஆனால் அந்த உறவில் இருந்தபோது எப்போதும் பதட்டத்துடனே இருப்பேன்.

அடுத்து என்ன நடக்குமோ, ஏதாவது சொல்லி விடுவார்களோ என பயந்து கொண்டே இருப்பேன். அதனாலேயே எனக்கு சிரிக்கவே மறந்துவிட்டது. இரவெல்லாம் அழுது கொண்டிருப்பேன். அடுத்த நாள் ஷூட்டிங் போன இடத்தில் சாப்பிட முடியாமல் அழுதிருக்கிறேன். இப்படி கசப்பான நினைவுகளில் இருந்து இப்போது நான் வெளியே வந்து என் பழைய நிலைக்கு வந்துள்ளேன் என்று அனுபமா பகிர்ந்துள்ளார்.