துருவ் விக்ரமைதான் அனுபமா சொன்னது..அயோக்கியத்தனம்!! வெளுத்துவிட்ட பிரபலம்..
அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், கேரள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்தார். தன்னை அந்த நபர் முழுமையாக கட்டுப்படுத்த பார்த்தார், 2 ஆண்டுகள் வேதனை அடைந்தேன் என்று விரிவாக கூறியிருந்தார்.
அந்த நடிகர் துருவ் விக்ரம் தான் என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

அதில், நான் சினிமா பத்திரிக்கையாளராக பல வருடங்கள் இருக்கிறேன். பல நடிகைகளிடம் என்னிடம் சொன்ன விஷயத்தை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியே யாரிடமும் நான் சொன்னதில்லை. அப்படி செய்வது அறமே இல்லை. அனுபமாவுக்கு பைசன் படம்தான் மிகப்பெரிய பெயரை கொடுத்தது. தூத்துக்குடி பெண்ணாகவே மாறிவிட்டார். அதற்கு காரணம் மாரி செல்வராஜ் தான்.
ஏற்கனவே துருவ் விக்ரம்தான் அனுபமாவின் காதலர் என்று சொன்னார்கள். தான் காதலித்த நபர் பெரிய சைக்கோவாகவே நடந்துகொள்ள தொடங்கிவிட்டார், நான் நடிக்கக்கூடாது, குடும்பமும் திட்டமிட்டு நிச்சயதார்த்தம் செய்ய பார்த்தார்கள் என்று சொன்னார்.

இவர்கள் மட்டும் ஊரில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கலாம், வீட்டுக்கு வரும் மருமகள் நடிக்கக்கூடாதாம், ஏன் நடிகை என்றால் கேவலமா? அனுபமா கூறியது துருவ் விக்ரமைத்தான், இதெல்லாம் பணக்கார திமிரின் உச்சம்தான்.
அயோக்கியத்தனம்
பசங்களுக்கு அது இருக்கும், துருவ்வின் அப்பா போராடி இந்த இடத்து வந்தவர். அதரு முக்கிய காரணம் பாலா, துருவ்வையும் பாலாதான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

பாலாவே ஒரு டார்ச்சர் பார்ட்டிதான், ஆனால் அவரையே இவர்கள் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். எனக்கு மன அழுத்தம் அதிகமகிவிட்டதாக அனுபமா கூறுகிறார். அதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சனை.
அனுபமா ஒரு பெரிய தயாரிப்பாளரின் உறவினராக இருந்தால் அவரை யாராவது சீண்ட முடியுமா? அவர் நடுத்தர குடும்பம்தான். அனுபமா முட்டி மோதி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். எவ்வளவு பிரச்சனைகளை அவர் பார்த்திருப்பார்.

நடிகை என்றால் அவ்வளவு கிள்ளுக்கீரையா? சினிமாவில் இருக்கும் வாரிசுகள் எல்லாம் கதையே கேட்பதில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால் பெரிய கொம்பு வந்துவிடும், அனுபமாவை கண்ட்ரோல் செய்ய முயற்சித்தது பெரிய அயோக்கியத்தனம் என்று செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.