எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகிச்சைக்கு காரணம் இதான்!! நடிகை ஷகீலா வேதனை..

Shakeela Tamil Actress Actress
By Jai Aug 13, 2026 07:30 AM GMT
Report

ஷகீலா 

90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்து, குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பிம்பத்தையே மாற்றியவர்தான் நடிகை ஷகீலா. இந்நிலையில். திடீரென ஷகீலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகிச்சைக்கு காரணம் இதான்!! நடிகை ஷகீலா வேதனை.. | Shakila Rs 3 Lakh Neck Surgery Due To Mobile Using

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், நான் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவேன், ஆன்லைன் விளையாட்டுகளை அதிகம் விரும்பி விளையாடுவேன். படுக்கையில் ஒரு பக்கமாய் படுத்துக் கொண்டு, பல மணிநேரம் விளையாடுவேன்.

இதன் விளைவாகத்தான் கழுத்திலுள்ள முக்கிய ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகிச்சைக்கு காரணம் இதான்!! நடிகை ஷகீலா வேதனை.. | Shakila Rs 3 Lakh Neck Surgery Due To Mobile Using

இந்த சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் வரை செலவானதுடன், சாப்பிடுவது, நடப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைபடுகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளிடம் செல்போனை பெற்றோர் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.