சமந்தாவை தொடர்ந்து நடிகை அனுஷ்கா செட்டிக்கு இப்படியொரு நோயா!! ஷாக்கிங் நியூஸ்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கு சினிமாவில் சூப்பர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் தமிழில், ரெண்டு என்ற சிறு பட்ஜெட் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த அனுஷ்கா முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடிப்போட்டு நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றி நடித்ததால் பல ஆண்டுகள் உடல் எடையை குறைக்கமுடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். பின் பாகுபலி 2 படம் உட்பட சில படங்களில் நடித்து வந்த அனுஷ்கா, கடின உடற்பயிற்சி செய்து தன்னுடைய புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா எப்படி மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறாரோ, அதேபோல் நடிகை அனுஷ்காவும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அனைவரும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடியுள்ள நிலையில், ”தனக்கு சிரிப்பு வந்தால், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரிப்பை அடக்கமுடியாது. அப்படிப்பட்ட சிரமத்தை தான் சந்தித்து இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளாராம்.
இந்த தகவல் இணையத்தில் பரவி அனுஷ்கா ரசிகர்களையும் சினிமா நட்சத்திரங்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.