90'ஸ்க்கு ஒரு சக்திமான் 2k க்கு ஒரு அருந்ததீ..அனுஷ்கா நடிப்பிற்கு அடிமையான நபர் பலி..
சினிமாவில் சில படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறி அதற்கு அடிமையாக பல முறை பார்க்க செல்வார்கள். அப்படி ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் படங்கள் என்று அடிக்கிக்கொண்டே பலமுறை பார்த்து ரசிகர்கள் படங்களை கொண்டாடுவார்கள்.
அப்படி நடிகை அனுஷ்காவுக்கு அடிமையாகி தீக்குளித்து இறந்த நபரால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2009ல் இயக்குனர் கொடி ராமகிருஷ்ணன் இயக்கி தமிழ், தெலுங்கு படமாக வெளியான படம் அருந்ததீ. நடிகை அனுஷ்கா செட்டி, சோனு சூத், மனோரம்மா உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது.
அப்படி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரேணுகா பிரசாந்த் என்ற நபர் பியுசி 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அருந்ததீ படத்தினை பார்த்து அப்படத்தின் கதாபாத்திரங்கள் போன்று தன்னை பாவிந்து நடந்து கொண்டு வந்துள்ளார்.
ரேணுகா பிரசாத், கிட்டத்தட்ட 100 தடவைக்கும் மேல் இப்படத்தினை பார்த்துள்ளார். அனுஷ்காவின் மார்க்கெட் இல்லாமலும் வாய்ப்பில்லாமல் இருப்பது கூட தெரியாத அந்த நபர் மறுபிறவி எடுத்து வரும் அனுஷ்காவை போல் தன்னை நினைத்து தீக்குளித்துள்ளார்.
இறக்கும் நிலையில் கூட அவரின் அப்பாவிடம் குக்தி கொடுங்கள் அப்பா எனக்கு முக்கி கொடுங்கள் என்று கேட்க நான் எப்படி கொடுக்க முடியும் என்று கூறி புலம்பியுள்ளார். சினிமாவை நிஜம் என்று நம்பி இந்நபர் செய்த செயல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.