நீங்களே சொல்லிடுங்க.. நா சொன்னா மரியாதை கெட்டுடும்.. வாரிசு நடிகர் பட ஷூட்டிங்கில் கோபம் அடைந்த அனுஷ்கா
கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் ரசிகர்கள் படு மோசமான விமர்சனம் கொடுத்தனர். இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவத்தை பற்றி இன்று பார்க்கலாம்.
அனுஷ்கா இந்த படத்தில் தனக்கு மேக்கப் போடுவதற்காக சிலரை அழைத்து வந்திருக்கிறார். அவர்கள் மேக்கப் யூனியனை சேர்ந்தவர்கள் இல்லை.
இதனால் கோபம் அடைந்த மேக்கப் யூனியன் ஷூட்டிங் ஸ்பாட்டில் போராட்டமே நடத்தியுள்ளனர். படக்குழு, அனுஷ்காவிடம் வரவழைத்த மேக்கப் கலைஞர்களை திருப்பி அனுப்ப சொல்லி இருக்கிறர்கள். ஆனால் அனுஷ்கா மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகரிக்க கார்த்தி உடனடியாக வந்து அனுஷ்காவிடம், நீங்கள் அழைத்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை அனுப்பி விடுங்கள். இல்லை என்றால், பிரச்சனை ஏற்படும். நாங்கள் போக சொன்னால் அது மரியாதையாக இருக்காது என்று கூறினாராம்.
கடைசியில் அனுஷ்கா அழைத்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டு, தனக்கு தானே மேக்கப் போட்டு கொண்டு படத்தை அரைமனதோடு நடித்து கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.