மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சினேகன்.. இரண்டு குழந்தைகளுடன் தவிக்கும் மனைவி!
Tamil Cinema
Snehan
By Bhavya
சினேகன்
தமிழ் சினிமாவில் நாம் எதிர்ப்பார்க்கவே முடியாத நிறைய ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களை வியக்க வைத்தவர் சினேகன்.
இவர் பிக்பாஸில் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகு தான் சினேகன் இப்படிபட்ட பாடல்களை எழுதியுள்ளாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இவர் பிரபல நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தவிக்கும் மனைவி!
இந்நிலையில், சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அவர் பகிர்ந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
