விலைமாதுவாக நடிக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி..

Anushka Shetty Gossip Today Tamil Actress Actress
By Edward Nov 13, 2024 03:45 PM GMT
Report

அனுஷ்கா ஷெட்டி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பின் இவர் தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

விலைமாதுவாக நடிக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி.. | Anushka Shetty Talk About Why Act Vaanam Size Zero

இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அனுஷ்கா நடித்த படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அனுஷ்கா ஷெட்டி திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வருவதை நம்மால் காண முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் வயது தான் 43 வயதை எட்டிய நிலையிலும் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் உலா வருகிறார்.

வானம் - நடிக்க காரணம்

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வானம் படத்திலும், இஞ்சி இடுப்பழகி படத்திலும் ஏன் நடித்தேன் என்பதை கூறியிருக்கிறார். தைரியம் என்பது நீங்கள் எடுக்கும் சோதனை முயற்சிகளில் தான் கிடைக்கும் என்பதால் என் கரியரில் நல்வாய்ப்பாக இதுபோன்ற கதைகளில் நடித்திருக்கிறேன்.

அருந்ததி படத்துக்கு பின் நான் வானம் படத்தில் விலைமாதுவாக நடித்தேன். உடனே, அருந்ததி போன்ற படத்தில் நடித்துவிட்டு இப்படியான ரோலில் ஏன் நடிக்கிறீர்கள் என்று பலரும் கேட்டார்கள்.

விலைமாதுவாக நடிக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி.. | Anushka Shetty Talk About Why Act Vaanam Size Zero

ஆனால் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்தது அதனால் அந்த படத்தில் நடித்தேன். எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இதயப்பூர்வமாக தோன்றிவிட்டால், அது எனக்குள் லாக்காகிவிடும். அதில் கிடைப்பது லாபமோ, நஷ்டமோ அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருப்பேன்.

விலைமாதுவாக நடிக்க காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி.. | Anushka Shetty Talk About Why Act Vaanam Size Zero

இஞ்சி இடுப்பழகி

மேலும் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பது ரிஸ்க் என்று சொன்னார்கள். ஆனால் அந்தக்கதையும் எனக்கு பிடித்ததால் நடித்தேன். நமக்கு பிடித்த கதைகளில் நடிக்காமல் போனால் திரைத்துறையில் எதற்காக இருக்க வேண்டும் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.