அமித் பார்கவ்-ஐ தொடர்ந்து அடுத்து வெளியேறியவர் இவரா? பிக்பாஸ் டபுள் எவிக்ஷன்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், 83 நாட்களாகியும் எந்தவொரு ஸ்வாரஷ்யமான சம்பவமும் நடக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், கடந்த வாரம் ஆதிரை இரண்டாம் முறையாக எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனையடுத்து இந்த வாரம் யார் எவிக்ட்டாகி வெளியேறப்போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
டபுள் எவிக்ஷன்
இந்நிலையில் நேற்றைய சனிக்கிழமை எபிசோட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அமித் பார்கவ் எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்ட நிலையில், அமித்தை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் கனி திரு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனையறிந்த நெட்டிசன்கள் மோசமான எவிக்ஷன் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.