40 வயதில் இளம் நடிகருடன் இணையும் நடிகை அனுஷ்கா.. அதுவும் உடல் எடை குறைத்து

Anushka Shetty
By Karthick Raja Jul 06, 2022 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் அனுஷ்கா ஷெட்டி. பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த அனுஷ்கா, தீடீரென உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் திரைப்படம் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை அனுஷ்கா. ஆம், தற்போது காமெடி கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, வளர்ந்த வரும் ஹீரோ ஒருவர் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதாகும் நடிகை அனுஷ்கா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.