விஜய்யின் படத்துக்கு பின் இப்படியான வாய்ப்பு தான் வருது!! அதான் நடிக்காமல் இருக்க காரணம்..

Vijay Anuya Bhagvath Tamil Actress Actress
By Edward Jun 28, 2024 12:00 AM GMT
Edward

Edward

Report

தமிழில் நடிகர் ஜீவா, சந்தானம் நடித்த "சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

விஜய்யின் படத்துக்கு பின் இப்படியான வாய்ப்பு தான் வருது!! அதான் நடிக்காமல் இருக்க காரணம்.. | Anuya Bhagwat Share Vijay Nanban After No Chance

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுயா, நண்பன் படத்தில் நடித்தப்பின் தனக்கு வரும் வாய்ப்புகள் பற்றி பகிர்ந்துள்ளார். நண்பன் படத்தின் போதுமூன்று நடிகர்கள் என்னை தூக்கிட்டு வரும் போது எனக்கு சந்தோஷமாக இருந்தது. விஜய்யை அடிக்கும் காட்சிக்காக நான் பயந்தேன். மெதுவாக அடித்த போது விஜய் சார், வேகமாக அடியுங்கள் என்று கூறினார்.

மேலும் பேசிய அனுயா, நண்பன் படத்திற்கு பின் எனக்கு அக்கா ரோல்கள் தான் தொடர்ச்சியாக வந்தது, நண்பன் எனக்கு கிரேட் சாய்ஸ் ஆக இல்லை. அதனால் பலரும் அக்கா ரோல், அம்மா ரோலுக்கு தான் இவர் செட்டாகுவார் என்று நினைத்துவிட்டார்கள்.

விஜய்யின் படத்துக்கு பின் இப்படியான வாய்ப்பு தான் வருது!! அதான் நடிக்காமல் இருக்க காரணம்.. | Anuya Bhagwat Share Vijay Nanban After No Chance

அது என் நடிப்பு தான் தவிர, நான் அப்படி இல்லை. எந்த வயது ரோலாக இருந்தாலும் சரி நான் நடிக்க தயாராக இருக்கிறேன். திரிஷா கூட அம்மா ரோலில் நடித்திருக்கிறார், கரீனா கபூர் கூட நடித்திருக்கிறார். நடிகைகளை வயதுப்படுத்தி பார்க்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.

நண்பன் படத்திற்கு முன் எனக்கு இப்படியொரு பயமில்லை, ஷங்கர் சாருக்காக நடித்தேன். அவருடன் பணியாற்றியது என்னுடைய கனவு என்று அனுயா ஓப்பனாக பேசியிருக்கிறார்.