சந்தானம் மறைவால் கண்ணீர்விட்டு அழுத இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.. வீடியோ..

Gautham Karthik A.R. Murugadoss
By Edward Mar 28, 2023 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தினை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ ஆர் மூருகதாஸ்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு பின் எந்த படமும் இயக்காமல் இருந்து வருகிறார். தற்போது அவரது உதவி இயக்குனர் என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்துள்ளார்.

சந்தானம் மறைவால் கண்ணீர்விட்டு அழுத இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.. வீடியோ.. | Ar Murugadass Emotional Speech Santhanam Died

இப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஏ ஆர் முருகதாஸ் தான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தது முதல் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

இப்படம் உட்பட ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய பல படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்து வந்தவர் டி சந்தானம். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் டி சந்தானம். அவர் பற்றி பேசும் போது ஏ ஆர் முருகதாஸ் கண்ணீர் விட்டு எமோஷ்னலாக பேசியுள்ளார்.