விஜய்க்கே தெரியாமல் அந்த விசயத்தை மறைத்த ஏ ஆர் முருகதாஸ்.. வெளியான உண்மை தகவல்..
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தினை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ ஆர் மூருகதாஸ். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு பின் எந்த படமும் இயக்காமல் இருந்து வருகிறார்.
தற்போது அவரது உதவி இயக்குனர் என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஏ ஆர் முருகதாஸ், பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது, எப்படி நடிகர் கார்த்திக் சாரை நினைக்காமல் எந்த ரொமான்ஸ் காட்சியையும் வைக்க முடியாது. அப்படி துப்பாக்கி படத்தில், செகண்ட் ஆஃப்பில், ஹீரோ ஹீரோயின் வெளியில் பேசிக்கொள்வார்கள். அப்போது விஜய் சார் காஜல் அகர்வாலிடம் பேசிவார்.
அந்த சீனை எடுக்கும் போது கார்த்திக் சார் தான் நியாபகத்திற்கு வந்தார். என்ன இது பெரியவங்களை அப்படி மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. அவர் வயசுக்கு மரியாதை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கோ என்று விஜய் சார் ஒரு டயலாக்கை கூறியிருப்பார்.
அதை எப்படி விஜய் சாரை சொல்லவைக்க முடியும் என்று நினைத்தபோது தான் கார்த்திக் சார் வந்தார் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் சாருக்கே தெரியாது என்று ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.