விஜய், ரஜினிக்கு கூட இதை செய்யாத ஏ.ஆர். ரகுமான்! உதயநிதி ஸ்டாலினை வைத்து தூக்கிய மாரி செல்வராஜ்
இந்தியா முழுவதும் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிஜேபி சார்ப்பாக பலர் ஆதரவு கொடுத்து வந்தாலும் இதை எதிர்த்து அரசியல் பிரமுகர்களும் மக்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதற்கு ஆணித்தரமான கருத்தினை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் டிவிட்டரிலும் நேரடியாகவும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழணங்கு என்று ஒரு பதிவினை போட்டிருந்தார். அதேபோல் இந்தி இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்ற கருத்துக்கு தமிழ் தான் இணைப்பு மொழி என கூறியிருந்தார்.
இப்படி தமிழ் மொழியில் அதிக ஆர்வமும் அக்கரையும் செயல்பட்டு வருகிறார் ஏ ஆர் ரகுமான். இதேபோல் சினிமாவில் சாதி சம்பந்தமான படங்களிலுக்கு இசையமைக்க வேண்டாம் என்று குறிக்கோளாக இருப்பவர்.
இதை ரஜினி மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கூட செய்யாமல் தவிர்த்து வருகிறார். தற்போது மார்செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்காக முதல் இசையமைக்க முடியாது என்று கூறியிருந்தாராம் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே சாதி என்ற பெயரில் பல இயக்குனர்கள் புரட்சியை செய்து வருவதால் தன் பேர் இதனால் கெட்டுப்போகிவிடும் என்று அதனை ஒதுக்கி வந்துள்ளார் ஏ ஆர் ரகுமான்.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நீங்கள் இருந்தால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று சமாதானம் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கு மாரி செல்வராஜின் ஒரு பிளான் தான் என்றும் கூறப்படுகிறது.