நீ என்ன கிழவியா என்று கேட்டார்கள், ஏ ஆர் ரகுமான் மகள் எமோஷனல்
A R Rahman
By Tony
ஏ ஆர் ரகுமான் இந்திய சினிமா தாண்டி உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர்.
இவர் இசையில் சமீபத்தில் வந்த ஆடு ஜீவிதம் படம் கண்டிப்பாக ஆஸ்கர் வரை செல்லும் என்று தற்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் ரகுமான் மகள் கதீஜா சமீபத்தில் மிக எமோஷ்னலாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், என்னிடம் பல பேர் என்ன இந்த சின்ன வயதிலேயே இப்படி பேசுகிறாய், கல்லூரி போனால் மாறி விடுவாய் என்றார்கள்.
ஆனால், நான் இப்போதும் அப்படியே உள்ளேன். இதை பார்த்த எல்லோரும் நீ என்ன கிழவி மாதிரி நடந்துகிற என்றெல்லாம் சொல்வார்கள், யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன், என் நேர்மையையும் மாற்ற மாட்டேன் என கூறியுள்ளார்.