இனிமே சின்னத்திரை நயன்தாரான்னு கூப்பிடாதீங்க!! அறந்தாங்கி நிஷா அதிரடி முடிவு..

Nayanthara Aranthangi Nisha
By Edward 2 days ago
Report

சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, லேடி சூப்பர் ஸ்டார், புன்னகை அரசி என்று பட்டப்பெயர்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு இருக்கிறது.

அதில், அஜித் தன்னை தல என்று கூப்பிட வேண்டாம் என்றும் உலகநாயகன் என்று தன்னை கூப்பிட வேண்டாம் என்று கமல் ஹாசனும் அறிவித்தனர்.

இனிமே சின்னத்திரை நயன்தாரான்னு கூப்பிடாதீங்க!! அறந்தாங்கி நிஷா அதிரடி முடிவு.. | Aranthangi Nisha Post Chinnathirai Nayanthara

சின்னத்திரை நயன்தாரா

இவர்களை தொடர்ந்து நடிகை நயன் தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம், நயன் தாரா என்ற அடையாளமே போதும் என்று கூறியிருந்தார். நயன் தாரா இப்படி கூறியது சிலர் கலாய்த்தும் விமர்சித்தும் வந்தனர்.

அவரது அறிவிப்பு வந்த சில வாரங்களுக்கு பின் தன்னை சின்னத்திரை நயன் தாரா என்று அழைப்பதை நிறுத்தக்கோரி விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் தான் சொந்தமாக வீடு வாங்கி குடிபெயர்ந்திருந்தார் அறந்தாங்கி நிஷா.