ஒரு நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி நிஷாவின் சம்பளம் இவ்வளவு தானா!! உண்மையை உடைத்த விஜய் டிவி
பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பல கலைஞர்கள் சினிமாவில் கால்பதித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள். அந்தவரிசையில் மிகப்பெரியளவில் பிரபலமாகியவர் அறந்தாங்கி நிஷா.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்ற நிஷா, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார். சமீபத்தில், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் KPY சாம்பியன்ஸ் 4 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது இடையில் ராமர் குறுக்கிட்டு, நீயெல்லாம் ஆங்காரா, அருண் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 5 ஆயிரம் பே-மெண்ட் வாங்கிட்டு போ என்று கூறியிருக்கிறார்.
மேலும் விஜய் தொலைக்காட்சி பணத்தை வீணாக்கிறீர்கள். பணத்தின் மதிப்பு தெரியாத, தொகுப்பாளினியே அல்லாதவங்களை இப்படி பண்ணுகிறீர்களே என்று கலாய்த்துள்ளார்.
அப்படியென்றால் அறந்தாங்கி நிஷா ஒரு நிகழ்ச்சிக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. KPY நிகழ்ச்சியில் 500 ரூபாயாக இருந்த சம்பளம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரின் சம்பளம் தற்போது 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு இதைவிட அதிகமாக வாங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.