ஆடிஷனில் அத்துமீறிய இயக்குனர்.. சிறு வயதில் அதை செய்தேன்!! கூச்சமில்லாமல் பேசிய நடிகை அர்ச்சனா..
சினிமாவில் வாய்ப்பிற்காக நடிகைகளுக்கு எதிராக பிரபலங்கள் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்படி தனக்கு நடக்கும் மோசமான அனுபவங்களை நடிகைகள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
அந்தவகையில் வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட சீரியல்களிலும், நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்த்ன கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தும் பிரபலமான நடிகை அர்ச்சனா மாரியப்பன் சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு ஆடிஷனுக்கு வருமாறு ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்காக நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் ஒரு வாரம் ஷூட் இருக்கும் என்று கூறினார்கள். சரி என்று அங்கு சென்ற போது அங்கிருந்த அவரது உதவி இயக்குனர்களை அந்த பெரிய இயக்குனர் வெளியே அனுப்பினார்.
பின் இயக்குனர் என்னிடம், உன் பேண்ட்-ஐ முழங்கால் வரை தூக்கு என்றது எதுக்கு சார் என்று கேட்டேன். நர்ஸ் வேடத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்க தான் என்று சொன்னார். சல்வார் அணிந்து சென்றதால் சரி என முழங்கால் வரை தூக்கினேன். பின் இன்னும் தூக்க சொன்னதால் இயக்குனரின் நோக்கம் என்ன என்று புரிந்து கொண்டேன்.
டாப் இயக்குனர் என்பதால் எதுவும் சொல்லாமல் நாளை வந்து காஸ்டியூம் போட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் அர்ச்சனா.
மேலும் நான் 5-ஆம் வகுப்பு படிக்கும் போது விளையாட்டு பீரியடில் கிரைவுண்டில் விளையாடியிருந்தேன். அப்போது அந்த பையன் எனக்கு கிஸ் அடித்ததாக என் கன்னத்தில் தான் அடித்தான் என்று கூச்சமில்லாமல் ஓப்பனாக பேசியிருக்கிறார்.