6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்..

Bollywood Indian Actress Actress
By Jai Jul 29, 2026 06:15 PM GMT
Report

அர்ச்சனா புரான் சிங்

பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் சர்மா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்.. | Archana Puran Singh Recalls Being Caned 10 School

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய விருது வயதில் அனுபவத்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, அதாவது என் 6 வயதில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

அவர் ஒரு பெரிய பிரம்பை எடுத்து என்னை கெட்ட பிள்ளை என்று கூறியபடி என் கையில் 10 முறை அடித்தார். நான் என்ன தவறு செய்தேன் என்று இப்போது கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த பிரம்படியின் வலி மட்டும் இன்னும் மறக்கவில்லை.

6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்.. | Archana Puran Singh Recalls Being Caned 10 School

வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்

பள்ளியில் தவறு செய்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியேவுள்ள காரிடாரில் முழங்காலிட்டு நிற்கவைப்பது வழக்கம். அந்த தண்டனை மிகவும் அவமானமான அனுபவம். பள்ளிப் பருவத்தில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். இருந்தாலும் குறும்புத்தனம் அதிகமாக இருந்ததால் ஆசிரியர்கள் அடிக்கடி உன் திறமையையும் ஆற்றலையும் வீணடிக்கிறாய் என கண்டிப்பார்கள்.

பின் நான் நடிகையாக மாறியபோது என் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்கள். நாங்கள் நீ ஐஏஎஸ் அல்லது ஐஎப்எஸ் அதிகாரியாக வருவாய் என்று நினைத்தோம், ஆனால் நீ நடிகையாகிவிட்டாய். உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று என்னிடம் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.