மறைந்த சிறகடிக்க ஆசை ஜெயமணி யார் தெரியுமா? யாருக்கும் தெரியாத கதை...

Serials Actors Tamil Actors Siragadikka Aasai
By Jai Jul 29, 2026 12:00 PM GMT
Report

ஜெயமணி

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலம் பூங்காவனம் என்ற ரோலில் நடித்து தனி இடம் பிடித்தவர் தான் நடிகர் ஜெயமணி. பல வருடங்களுக்குப்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினியின் போலி மலேசிய மாமா ரோலில் நடித்தார்.

இதனையடுத்து திடீரென இன்று ஜூலை 29 ஆம் தேதி தன்னுடைய 79வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமாகினார். அவரின் இறப்பு சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வேறொரு பக்கமும் இருக்கிறது என்ற தகவல் யாருக்கும் தெரியாது.

மறைந்த சிறகடிக்க ஆசை ஜெயமணி யார் தெரியுமா? யாருக்கும் தெரியாத கதை... | Do You Know Who Is The Actor Jayamani The Artist

இன்று மலேசியா மாமாவாக தெரிந்த ஜெயமணி, 90களில் திருமதி செல்வம் சீரியலில் பூங்காவனம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சிறகடிக்க ஆசை சீரியலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது ரொம்பவும் சந்தோஷம். இந்த சீரியலில் என்னை பார்த்ததும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

திருமதி செல்வம் சீரியலுக்குப்பின் ஒருசில சீரியல்களில் நடித்திருந்தேன். ஆனால் அதன்பின் எனக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை, அதனால் நானும் அப்படியே இருந்துவிட்டேன். பின் குமரன் சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறேன் என்றதும் ரொம்பவும் சந்தோஷமாக வந்தேன்.

இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடுவேன். அதனால்தான் என்னை எல்லோரும் பாராட்டுறாங்க. மலேசியா மாமா ரோல் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று கூறியிருந்தார்.

மறைந்த சிறகடிக்க ஆசை ஜெயமணி யார் தெரியுமா? யாருக்கும் தெரியாத கதை... | Do You Know Who Is The Actor Jayamani The Artist

யாருக்கும் தெரியாத கதை

இந்நிலையில், ஜெயமணியை பலருக்கும் நடிகராக தெரிந்து இருக்கலாம், ஆனால் அவர் ஒரு சிறந்த இயக்குநரும் கூட. நான் சுமார் 40 சிரியல்களை இயக்கியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

சின்னத்திரை மட்டுமில்லாது சில திரைப்படங்களிலும் இயக்கியிருக்கிறேன் என்றும் ஆர் ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். அப்படம் வெளியானப்பின் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன் என்று சொல்லியிருந்தார். சிறு வயதில் மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் மனதில் வைத்துக்கொண்டு அவர்களை போல் நடித்துக் காட்டுவேன் என்றும் அந்த ஆசையால்தான் நடிப்புக்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.