திருவண்ணமலை கிரிவலம் என்னால் உருவானது!! இளையராஜா விளக்கம்...
Ilayaraaja
Bakthi
By Jai
இளையராஜா
மனதில் சோகமோ, மகிழ்ச்சியோ அல்லது எதுவாக இருந்தாலும் சரி அதை போக்கும் மாத்திரையாக இருப்பது தான் இசைஞானி இளையராஜாவின் இசை. பல தலைமுறைகள் தாண்டி இளையராஜாவின் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வளவு புகழுக்கு பேர் போன ராஜா அவர்கள் ஒருசில விமர்சனங்களையும் வெறுப்பையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் திருவண்ணாமலை கிரிவலம் குறித்து அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
திருவண்ணமலை கிரிவலம்
அதில், 1980 முதல் 2000 ஆண்டு வரை ஒவ்வொரு பெளணர்மியிலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். நான் அந்த மலையை சுற்றி வருவதை மக்களும் பின்பற்றினார்கள் என்று அங்கிருந்த அடியார்கள் சொல்வார்கள்.

நான் சுற்றியப்பின் தான் கிரிவலப்பாதை சுற்றுவது உருவானது என்று அவர்கள் என்னிடம் சொல்லித்தான் எனக்கு தெரியும் என்று இளையராஜா கூறியது வைரலாகியுள்ளது.