கல்யாண வீட்டை கருமாதி வீடாக மாற்றிய அறிவுக்கரசி!! எதிர்நீச்சல் தொடர்கிறது..
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். கடந்த ஆண்டு முதல் பாகம் நிறைவுற்ற நிலையில், தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
தற்போது சீரியலில் தர்ஷன் திருமண காட்சிகள் நடந்து வருகிறது. குணசேகரன், ஜனனி பிளானை கண்டு பயந்து 9 மணிக்கு இருந்த முகூர்த்த நேரத்தை 4 மணிக்கு எல்லாம் மாற்றியதோடு, வெளி ஆட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தர்ஷன் முதல் அனைவரையும் தன் கண்முன்னே தூங்க வைக்கிறார்.
அறிவுக்கரசி
இன்னொரு பக்கம் ஜனனி, ஜீவானந்தம், பார்கவி என மூவரும் ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். குணசேகரன் அந்த மூவரையும் ரவிகளிடம் உயிரை எடுக்க சொல்ல, இன்னொரு பக்கம் அறிவுக்கரசி, வீடியோ காட்டி மிரட்டி பிளாக் மெயில் செய்யும் நபரை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுகிறார்.
அதன் பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.