இரண்டவது நாளில் குறைந்தபோன OG படத்தின் வசூல்.. இவ்வளவு கம்மியா
பவன் கல்யாண் நடிப்பில் இந்த ஆண்டு ஹரி ஹர வீர மல்லு படம் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது. கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாணின் OG படம் கடந்த 25ஆம் தேதி வெளிவந்தது.
இப்படத்திற்கு உலகளவில் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தை இயக்குநர் சுஜித் இயக்க DVV நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், ராவ் ரமேஷ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
முதல் நாள் OG திரைப்படம் உலகளவில் ரூ. 150+ கோடி வசூல் செய்தது. இது இப்படத்திற்கு முதல் நாளில் கிடைத்த மாபெரும் ஓப்பனிங் ஆகும். ஆனால், இரண்டாவது நாளில் மாபெரும் சரிவை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சந்தித்துள்ளது.
ஆம் இரண்டாவது நாளில் இப்படம் ரூ. 38 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மொத்தமாக இரண்டு நாட்களில் ரூ. 188 கோடி வசூல் செய்துள்ளது.