இனி பொறுக்க முடியாது.. பொங்கிய போனி கபூரின் மகன்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தற்போது இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் போனி கபூர். அவர் அஜித்தின் AK61 உள்ளிட்ட பல படங்களை பல மொழிகளில் தயாரித்து வருகிறார்.
அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட் சினிமாவில் நடிகராக இருக்கிறார். அவரை விட 12 வயது மூத்த பெண்ணான மலைக்கா அரோராவை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். அந்த நடிகைக்கு தற்போது 48 வயது ஆகிறது. அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அர்ஜுன் கபூர் அளித்து இருக்கும் பேட்டியில் சமீப காலமாக பாலிவுட் படங்களை boycott செய்வதாக சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரெண்டுகள் பற்றி பேசி இருக்கிறார்.
இதை எல்லாம் பார்த்து நாம் அமைதியாக இருந்தது தான் தவறு, நாம் டீசண்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம், ஆனால் அதையே அவர்கள் advantage ஆக எடுத்துக்கொண்டார்கள். இதையே பழக்கமாகவும் மாற்றிவிட்டார்கள். இனியும் பொறுக்க கூடாது என அர்ஜுன் கபூர் கூறி இருக்கிறார்.
இப்படி பேசிய அர்ஜுன் கபூரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.