அந்த மூணு படமும் பிளாப் தான்!! உண்மையான காரணத்தை உடைத்த ஏ ஆர் முருகாஸ் தாஸ்

Rajinikanth Vijay Mahesh Babu A.R. Murugadoss
By Edward Apr 08, 2023 05:30 PM GMT
Report

தீனா படம் முதல் கடைசியாக தர்பார் படம் வரை பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். சமீபத்தில் ஆக்ஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்த முருகதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் கடைசியா நீங்கள் இயக்கிய ஸ்பைடர், சர்க்கார், தர்பார் படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர்களால் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த முருகதாஸ், எவ்வித மறுப்பும் இல்லாமல் சரியான திட்டமிடாமல் ஷூட்டிங் நடத்தியது தான் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பைடர் படத்தில் நடிகர் மகேஷ்பாபுவின் காட்சிகள் குறைவாக இருந்ததால் அவரது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.

அதேபோல் சர்க்கார், தர்பார் படங்களின் தோல்விக்கு காரணம் அவசரமாக எடுக்கப்பட்ட சூழல் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி முருகதாஸ் கூறிய ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சர்க்கார் படம் விஜய்யின் மார்க்கெட்டை தூக்க மிகப்பெரிய வசூலை ஈட்டியிருந்தது.

மிகப்பெரிய வசூல் படத்தினை ஏன் முருகதாஸ் தோல்வி படமாக கூறியிருக்கிறார் என்றும் இணையத்தில் புரியாத குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.