கர்ப்பத்தை கலைக்க மனைவி திவ்யா நாடகம்.. சீரியல் நடிகை மீது கணவர் அர்ணவ் புகார்..
சன் தொலைக்காட்சியில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலன் அறிமுகமாகியவர் கன்னட நடிகை திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த திவ்யா சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் சீரியல் நடிகர் அர்ணவ் என்பவருடன் காதல் ஏற்பட்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் திவ்யா. திருமணமாகாமல் கர்ப்பமாகிய நிலையில் இருவரும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்ற செய்தியை வெளியிட்டார் திவ்யா.
தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்டிருக்கும் காணொளி pic.twitter.com/hnhrS8IxfC
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
இந்நிலையில் திவ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னை கொடுமைப்படுத்தி அடித்ததில் வயிற்றில் அடிப்பட்டதாகவும் கர்ப்பம் கலைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார்.
மயக்கம் அடைந்து பார்க்கும் போது கணவர் அங்கில்லை வயிற்றில் வலி ஏற்பட்டு பிளீடிங் ஆனதாகவும் தெரிவித்தார் திவ்யா. இந்நிலையில், திவ்யா மீது அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

நடிகை திவ்யா தன்னை தாக்கியதாக கூறி வெளியிட்ட வீடியோ முற்றிலும் பொய் என்றும் தான் அப்போது வீட்டிலேயே இல்லை என்றும் ஆதரமாக சிசிடிவி காட்சிகளும் இருக்கிறது என்று புகாரில் தெரிவித்தார்.
மேலும் கருவை கலைக்கவே திவ்யா இப்படியான நாடகத்தை நடத்தி வருகிறார் என்று அர்ணவ் கூறியுள்ளார். நண்பர்களின் தவறான வழிக்காட்டுதல் தான் திவ்யாவை இப்படியான நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அர்ணவ்.