பிறந்த குழந்தையை தூக்க முடியாத சூழ்நிலை!! மனைவி திவ்யாவால் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகர்..
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஜோடி திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ். கடந்த ஆண்டு இருவரும் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றிருந்தார்.
அது தெரிந்து திவ்யாவை திருமணம் செய்த அர்னவ், அதன்பின் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்திருந்தது. தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போலிசாரிடம் சென்று புகாரளித்தும் இருந்தார் திவ்யா ஸ்ரீதர்.
இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தை கூட பார்க்க வரவில்லை என்று திவ்யா குற்றச்சாட்டு சொல்லியதை அடுத்து அர்னவ் அதுகுறித்து பேட்டியொன்றில் விளக்கம் கொடுத்து கண்ணீர் விட்டுள்ளார்.
அதில், குழந்தையை பார்க்க சென்றால் ஏதாவது பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காக அங்கு செல்லவில்லை. தான் அனுபவித்த வலிகள் எல்லாம், செய்யாத தவறுக்கு அனுபவித்த தண்டனைகள் எல்லாமே என்னால் மறக்க முடியாது. தன் குழந்தையை தூக்கிக்கூட கொஞ்ச முடியாத சூழலில் இருக்கிறேன் என்று கண்ணீர் விட்டுள்ளார்.
மேலும், குழந்தையை கொடுத்தால் மட்டும் போது, நல்ல அப்பாவாக இருப்பேன் என்றும் எப்படியும் குழந்தைக்கு உண்மை ஒரு நாள் தெரியவரும் என்று கூறி எமோஷ்னலாக பேசியுள்ளார். சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் நேரில் சென்று குழந்தையை பார்க்க விரும்பவில்லை எனவும் வீடியோ கால் மூலமாவது காட்டுமாறு தொகுப்பாளரை கேட்டுக்கொண்டார் நடிகர் அர்னவ்.
