திடீர் நெஞ்சுவலி..மருத்துவமனையில் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை..
ஏ ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஏ ஆர் ரஹ்மான் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் அவரது மனைவி சாய்ரா பானு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு ஏ ஆர் ரஹ்மானும் உதவி செய்தார் என்றும் அவருக்கு நன்றி என்றும் சாய்ரா பானு தெரிவித்தார்.
ஆஞ்சியோ சிகிச்சை
இந்நிலையில், ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாவும் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.