நியூசிலாந்தில் காதலிக்கு பிரபோஸ் செய்து நிச்சயத்தை முடித்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்..
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், தன்னுடைய காதலியும் நடிகையுமான சம்ரீன் கவுரை நியூசிலாந்தில் காதல் புரபோஸ் செய்து நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் 2027 தொடருக்காக பஞ்சாப் அணியில் இருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார், ரூ. 18 கோடிக்கு மும்பை அணி அர்ஷ்தீப் சிங்கை டிரேட் செய்துள்ளது மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அர்ஷ்தீப் சிங் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலி சம்ரீன் கவுரின் விரலில் மோதிரம் போட்டு எடுத்த புகைப்படத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அந்த பதிவில், வாழ்க்கை எங்களுக்கு கொடுத்த அனைத்திலும், நாங்கள் ஒருவருக்கொருவர் கிடைத்ததில்தான் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்போம் 11.11.2026 என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவுட்ட பதிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



