சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: திவாகரின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் இந்து! நடந்தது என்ன?

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Nov 13, 2026 09:19 AM GMT
Report

சின்னஞ்சிறு கிளியே

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'சின்னஞ்சிறு கிளியே'. இந்த சீரியலில் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் வரப்போகின்றன. குறிப்பாக, திவாகரின் இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று இந்து முயற்சி செய்து வரும் நிலையில், கிருபா எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திவாகரின் இரண்டாவது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள்! ஒருபக்கம் திவாகரின் இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஜெயந்தியோ ஒரு ஓரமாக நின்று அழுதுகொண்டிருக்கிறாள். சுகுணாவும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். திவாகரும் இந்த நிச்சயதார்த்தத்தில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல் சோகமாக நிற்கிறான். இதைப் பார்த்த கிருபா, "பெண்கள் எல்லாரும் சேர்ந்து இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தப் பார்க்கிறீங்களா? என்ன நடந்தாலும் இந்த நிச்சயதார்த்தம் நடந்தே தீரும்.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: திவாகரின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் இந்து! நடந்தது என்ன? | Chinna Chiru Kiliye Serial Nov 13 Episode Preview

எல்லாரும் போய் உங்க வேலையைப் பாருங்க" என்று அங்கிருப்பவர்களை அதட்டி அனுப்புகிறார். ஜெயந்திக்காக வருந்தும் கர்ணா... ஆறுதல் சொல்லும் பாண்டி! இந்த நிச்சயதார்த்தத்தில் கொஞ்சமும் விருப்பம் இல்லாத கர்ணா, வேறு வழியில்லாமல் மாலை வாங்குவது, மற்ற ஏற்பாடுகளைச் செய்வது என தவித்துக்கொண்டிருக்கிறான். இதற்கிடையில் இந்து, தீபாவின் குழந்தையைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். அப்போது கருணாவிடம் வரும் பாண்டி, என்ன மச்சான், இப்படி வேலை பார்த்துட்டு இருக்க? என்று கேட்கிறான்.

அதற்கு கர்ணா, "வேற வழியே இல்லடா, நான் என்னதான் பண்றது? நான் என்ன முழு மனசோடவா இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்கேன்?" என்று கண்கலங்கி வருந்துகிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் விஷ்வா, அப்பா கூப்பிடுவதாகச் சொல்லி கருணாவை அழைத்துச் செல்கிறான். கட்சித் தலைவரையே திருப்பி அனுப்பிய கிருபா! ஒருவழியாக நிச்சயதார்த்த சடங்குகள் தொடங்குகிறது. திவாகரையும் மணப்பெண்ணையும் மேடையில் உட்கார வைக்கிறார்கள். கிருபா மாலையை எடுத்து ஜெயந்தியிடம் கொடுத்து, மணப்பெண் கழுத்தில் போடச் சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் ஜெயந்தியும் அழுதுகொண்டே மாலை போடுகிறாள். அந்த நேரத்தில் கட்சித் தலைவர் அங்கு வருகிறார். அவரை வரவேற்கும் கிருபாவிடம் அவர் கடுமையாகப் பேசுகிறார். "நீ கட்சியில் இருக்க, உனக்கு எம்.எல்.ஏ சீட் வேற கொடுக்கப் போறோம். இந்த நேரத்தில் உன் தம்பிக்கு இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் நடத்திட்டு இருக்கியே? இதனால் கட்சிக்குத்தான் அவப்பெயர் வரும். முத்துலட்சுமி மாதிரி ஒரு மனைவி இருக்கும்போது திவாகர் இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டு கண்டிக்கிறார். ஆனால், கிருபா கொஞ்சம்கூட அசரவில்லை.

"எனக்கு எம்.எல்.ஏ சீட்டும் வேண்டாம், கட்சியும் வேண்டாம். எதுவுமே வேண்டாம். எங்களுக்கு குடும்ப கௌரவம்தான் முக்கியம். இது எங்க குடும்பப் பிரச்சனை, நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க" என்று சொல்லி கட்சித் தலைவரையே அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். கட்சிப் பதவியையும் எம்.எல்.ஏ சீட்டையும் விட குடும்ப கௌரவம் தான் முக்கியம் என்று கிருபா எடுத்த இந்த அதிரடி முடிவைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். சித்ராவுக்கு அதிர்ச்சி... இந்துவுக்கு வந்த அவசர போன்! கட்சித் தலைவர் வந்தும் நிச்சயதார்த்தத்தை நிறுத்த முடியாமல் போனதைக் கேள்விப்பட்ட சித்ரா அதிர்ச்சியடைகிறாள்.

உடனே இந்துவுக்கு போன் செய்து, "கட்சித் தலைவர் நேர்ல வந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. கிருபா அவரையே திருப்பி அனுப்பிட்டாங்க. நிச்சயதார்த்தமும் நடந்துட்டு இருக்கு. இனி என்ன பண்றது?" என்று பதற்றத்துடன் கேட்கிறாள். மறுபக்கம், நிச்சயதார்த்தம் நடப்பதைப் பார்த்து கர்ணா மனதுக்குள் நொறுங்கிப் போயிருக்கிறான்.

இப்படி கிருபா ஒருபக்கம் பிடிவாதமாக இருக்க, இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று இந்து மறுபக்கம் போராடுகிறாள். இனி இந்துவின் அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.