சீரியல் நடிகையுடன் காதலில் இருக்கிறாரா பாரதி கண்ணம்மா நாயகன்! யார் தெரியுமா?

Bharathi Kannamma Serials
By Edward Apr 28, 2022 06:52 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. அப்படி மிகப்பெரியளவில் ஹிட் கொடுத்து வரும் சீரியலாக அமைந்து வருவது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள்.சமீபத்தில் அந்த தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களை புகழும் வண்ணம் விருது நிகழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதில் கடந்த ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகன் அருண் பிரசாத் சிறந்த நடிகர் விருதினை பெற்றார். ஆனால் இந்த வருடம் அதை இழந்தார். ஆனால் இவரைப் பற்றிய ஒரு விஷயம் நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது இந்த விருது விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள்.

எனவே அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்துவிட்டது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலில் இருப்பதாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறார்கள்.